மாவட்ட செய்திகள்

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது + "||" + 2 arrested for stealing idol at temple near Pattiviranapatti

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது.
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை சாலையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் சோலை ஈஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன்னாலான அம்மன் சிலை, மைக்செட் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த பாண்டி (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்(43) ஆகியோர் கோவிலில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் 3 வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கணவன்-மனைவி கைது
ஈரோட்டில் 3 வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 புதிய கார்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை பகுதிகளில் மது-புகையிலை விற்றதாக 8 பேர் கைது
அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை பகுதிகளில் மது, புகையிலை பொருட்கள் விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சேலத்தில் போலியாக காசோலை தயாரித்து மோசடி செய்ய முயற்சி 2 பேர் கைது
சேலத்தில் போலியாக காசோலை தயாரித்து மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருச்செங்கோட்டில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது
திருச்செங்கோட்டில் நக்கைடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. குஜராத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கிய கும்பல் கைது
குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து வழங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை