மாவட்ட செய்திகள்

இன்று தளர்வில்லாத ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் + "||" + Relentless curfew today: People flocking to Dindigul to buy goods

இன்று தளர்வில்லாத ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள்

இன்று தளர்வில்லாத ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள்
இன்று தளர்வில்லாத ஊரடங்கு என்பதால், திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித தளர்வும் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டு விடும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

ஆனால், ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கினர். அதன்படி திண்டுக்கல்லில் நேற்று பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு திரண்டனர். திண்டுக்கல் நகர் மட்டுமின்றி புறநகரை சேர்ந்தவர்களும் நகருக்கு வந்தனர். இதனால் பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இறைச்சி-மீன் விற்பனை

மேலும் அசைவ பிரியர்கள் 2 நாட்களுக்கு தேவையான இறைச்சி, மீன் வாங்கினர். இதற்கு வசதியாக திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே மீன்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தற்காலிக மீன்கடைகள் இருந்தன. அனைத்து மீன்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் கூட்டத்துக்கு குறைவில்லை.

அதேபோல் மது பிரியர்கள், மதுபானம் வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் அனைத்து மதுக்கடைகளிலும் மாலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம் பொருட் களை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் திரண்டதால், திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று, நெரிசலை சரிசெய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: 3 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் கர்நாடக அரசு உத்தரவு
நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. தொடர் பண்டிகைகள் எதிரொலி பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அதிகாரிகளுக்கு, எடியூரப்பா உத்தரவு
தொடர் பண்டிகைகள் வருவதை தொடர்ந்து பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
3. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
4. தாசில்தார் மேற்பார்வையில் அமுதசுரபி பெட்ரோல் பங்குகள் இயக்கம் கலெக்டர் அருண் உத்தரவு
தாசில்தாரின் மேற்பார்வையில் அமுதசுரபி பெட்ரோல் பங்குகள் இயங்க கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
5. அபராதம் விதிக்கப்படும் முககவசம் அணியாதவர்களை பிடிக்க தீவிர சோதனை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
மும்பையில் முககவசம் அணியாதவர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.