மாவட்ட செய்திகள்

அரியலூர், பெரம்பலூரில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு + "||" + Full curfew in Ariyalur, Perambalur

அரியலூர், பெரம்பலூரில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

அரியலூர், பெரம்பலூரில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
பெரம்பலூர்,

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்தபடி கடந்த மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரியலூர் நகரில் சில மருந்து கடைகள், மருத்துவமனைகள் திறந்திருந்தன. அரியலூர் மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, கைலாசநாதர் கோவில் தெருக்கள் சந்திக்கும் தேரடி நான்கு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள் அடைப்பு

பெரம்பலூர் நகரில் நேற்று கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால்பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் பகுதியில் கடைவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், திருச்சி சாலை, காமராஜர் வளைவு, தபால்நிலைய தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கட்டுப்பாடான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், நேற்று சுபமுகூர்த்த தினமாக இருந்ததால் பொதுமக்களில் பலர் திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்ததை காணமுடிந்தது. மாவட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கிராமப்புறங்களில் பெட்டிக்கடைகள் வழக்கம்போல திறந்து வைக்கப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா; போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கு அறிவிப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
3. கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று திறப்பு
கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
4. ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல்: போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்
கர்நாடகத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டு செல்ல, உரிமையாளர்கள் வராததால் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.
5. சாலையோர உணவுப்பொருட்களும் இனி ஆன் லைனில் கிடைக்கும்...?
சாலையோரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆன்லைன் தளங்கள் மூலம் சந்தைக்குக் கிடைக்க மத்திய அரசு ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.