மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல் + "||" + Husband hysterical on suspicion of murdering teenager by throwing stone at head

தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்

தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்
பள்ளிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 28). ஆட்டோ, மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஆனந்தி (26) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மோகன்குமார் (7) என்ற மகனும், சித்திகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் தொழில் விஷயமாக அடிக்கடி ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருவார்.

கடந்த சில வாரங்களாக ஆனந்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கல்லை போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தங்களை பிரித்து வைக்கும்படி மனு அளித்தனர். அங்கிருந்த போலீசார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தெரிவித்தனர். இதனால் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டுக்கு திரும்பினர்.

ஆனால் ஆனந்தி வீட்டுக்குள் செல்லாமல் வெளியே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்தியின் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து, ரத்தம் வெளியேறியது. வலியால் அலறிய ஆனந்தி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மணிகண்டன் தனது மனைவி ஆனந்தியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனந்தியின் தாய் கனகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று இரவு கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி
கொலையான ரவுடியின் ஆதரவாளர்கள்- எதிர் தரப்பினர் கத்தி, கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது தப்பி ஓட முயன்றபோது சிமெண்டு கூரை உடைந்து கீழே விழுந்து ரவுடியின் ஆதரவாளரான வாலிபர் பலியானார்.
2. தட்டார்மடம் வியாபாரி கொலை: கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேலும் ஒருவர் சிக்குகிறார்
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்குகிறார்.
3. காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தம்பி கைது
கொப்பல் அருகே, காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவ கொலை செய்த பெண்ணின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
4. காண்டிராக்டர் கொலையில் 5 பேர் கைது மாமூல் தர மறுத்ததால் தீர்த்துக் கட்டியதாக பரபரப்பு தகவல்
புதுவை காண்டிராக்டர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாமூல் தராத ஆத்திரத்தில் அவரை தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
5. இரும்பு கம்பியால் விவசாயி அடித்து கொலை செல்போனை பறிக்க முயன்ற மர்மநபர்கள் கொடூரச்செயல்
நடைபயிற்சிக்கு சென்ற விவசாயியை மர்மநபர் கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு, செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.