மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 402 பேர் பலி நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு + "||" + In Tiruvallur district For corona infection So far 402 people have been killed On the same day yesterday 299 people were affected

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 402 பேர் பலி நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 402 பேர் பலி நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 402 பேர் பலியாகி உள்ளனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 767 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 6 பேர் பலியானதையொடி திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம்மாவட்டத்தில் நேற்று 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 351 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 194 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 8 பேர் உயிரிழந்தையடுத்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி பெரியார் பகுதியை சேர்ந்த 15, 16 வயது சிறுவர்கள் உள்பட 44 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர், 29 வயது இளம்பெண், 35 வயது வாலிபர் உள்பட 41 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 109 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 421 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் - கல்வி அதிகாரி தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 323 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 323 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.