மாவட்ட செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் ஆய்வு + "||" + Corona test collector Arun inspects primary health centers

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த கொரோனா பரிசோதனை முகாம்களில் கலெக்டர் அருண் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மருத்துவக்குழு மற்றும் விஞ்ஞானிகள் குழுவை புதுவைக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. மத்தியக் குழுவும் புதுவையில் ஆய்வுகள் நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையில் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனைகளை செய்யும் கூறப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

இதன் அடிப்படையில் நேற்று ரெட்டியார்பாளையம், கொசப்பாளையம், லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த முகாம்களில் புதுவை கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பல இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
2. சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி அமையும் இடத்தை, அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.
3. வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பது எப்படி? அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை
வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதையொட்டி அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.
4. வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று எடியூரப்பா நேரில் ஆய்வு
வட கர்நாடகத்தில் மழை- வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
5. அனுமதி பெறாத மனைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
அனுமதி பெறாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.