மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிப்பு + "||" + 300 affected by corona infection in Tiruvallur district

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 300 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 325 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 87 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள பனகாட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவர், பெரியார் தெருவில் வசிக்கும் 57 வயது ஆண், ஊரப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 21 வயது இளைஞர், நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் வசிக்கும் 62 வயது முதியவர், குமிழி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 299 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 366 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 898 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 987 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 20 வயது பெண், 75 வயது மூதாட்டி, ஆதனூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோரையும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 189 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 425 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 273 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.