மாவட்ட செய்திகள்

வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்ற பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் + "||" + Bangalore SJ Park police inspector suspended for money laundering

வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்ற பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்ற பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு,

துமகூரு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொப்பரை தேங்காய், புளி உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வியாபாரியிடம் வேலை செய்யும் 2 ஊழியர்கள் காரில் வந்து பெங்களூரு சிக்பேட்டையில் உள்ள கடைகளில் ரூ.26 லட்சத்தை வசூலித்தனர். பின்னர் அவர்கள் காரில் துமகூருவுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், ஊழியர்கள் 2 பேரையும் கடத்தி ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீவன்குமார், அவரது மாமா ஞானபிரகாஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

இந்த நிலையில் கைதான ஜீவன்குமாரிடம் விசாரித்த போது கொள்ளையடித்த பணத்தில் ரூ.6 லட்சத்தை, எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் யோகேஷ்குமாரிடம் கொடுத்ததாக கூறினார். இதுகுறித்த தகவல் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்தின் கவனத்திற்கு சென்றது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் ஜீவன்குமாரிடம் இருந்து யோகேஷ் குமார் ரூ.6 லட்சம் பெற்றதாக கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் யோகேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார். மேலும் யோகேஷ் குமார் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க யோகேஷ் குமார் முன்ஜாமீன் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பணிக்கு வந்த இடத்தில் தொற்று: கொரோனா பாதித்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கார் ஓட்டிய கலெக்டர்
தேர்தல் பணிக்கு வந்த இடத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வடமாநில ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கார் ஓட்டி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மதுரை கலெக்டர் அன்பழகன் சேர்த்தார். இதனால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
2. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
3. ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
4. சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
5. வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் ஊழல் குறையும்: குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் குடிமராமத்து திட்டப்பணி விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.