மாவட்ட செய்திகள்

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது + "||" + Bird-butterfly survey work started in Anthiyur forest

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள்-வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அந்தியூர்,

அந்தியூர், பர்கூர், தட்டகரை வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதே போல இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஷ்மி ஜு விஸ்வநாதன் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் அந்தியூர் வனச்சரகர் உத்தர சாமி, பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், தட்டகரை வனச்சரகர் பழனிசாமி மற்றும் வன ஊழியர்கள், வன ஆர்வலர்கள், ஈரோடு, சேலம், கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்குவர். இவர்களுக்கு நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

2 நாட்கள்...

இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அந்தியூர், பர்கூர், தட்டக்கரை ஆகிய வனப்பகுதிக்குள் கணக்கெடுப்பு குழுவினர் நேற்று சென்று வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிக பூக்கள் பூத்து இருக்கக்கூடிய செடி, கொடிகள் வளர்ந்து உள்ள பகுதி, நீர்நிலை உள்ள பகுதிக்கு சென்று பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளை நேரில் பார்த்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கணக்கெடுப்பு நடத்துகிறோம். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கணக்கெடுப்பின் முடிவில் தான் வனப்பகுதியில் எத்தனை பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன என்பது தெரியவரும்’ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது
தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. வருகிற 15-ந் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2. உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி
உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது.
3. கோரிமேடு வாய்க்கால் தூர்வாரும் பணி சபாநாயகர் சிவக்கொழுந்து ஆய்வு
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் நகர பகுதியில் உள்ள 16 பெரிய வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
4. வாரச்சந்தைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்
வாரச்சந்தைகளை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.
5. நாகர்கோவில் நகரில் சாலைகள் சீரமைக்கும் பணி மும்முரம் மாநகராட்சி- நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை
நாகர்கோவில் நகரில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து செய்து வருகின்றன.