மாவட்ட செய்திகள்

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் + "||" + What is the cause of declining corona damage in Madurai? Description by health officials

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி விட்டது. அதன்படியே தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்க காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

தொடக்கத்தில் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதாவது கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரம்ப காலத்தில் நாளொன்றுக்கு 10, 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 300, 400 என அதிகரித்து வருகிறது. இது ஒரு சங்கிலி தொடர் போன்றது தான். கொரோனா பாதிப்பானது அதிகரித்து குறையும். அந்த வகையில் மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக மாறி இருக்கிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். வரும் காலங்களிலும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அலட்சியம் கூடாது

பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மற்ற நோய்கள் போல் கொரோனாவிடம் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் அது விபரீதமாக மாறிவிடும். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்
மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து நெல்லை மின்வாரிய அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
2. பரீட்சார்த்த முறையில் பள்ளிகளை திறந்துள்ளோம் நாராயணசாமி விளக்கம்
பரீட்சார்த்த முறையில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. வேளாண்மை சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மைகள் என்ன? மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மைகள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
4. விவசாய சங்க பிரதிநிதிகளுடன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு; வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கம்
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
5. சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? என்பதற்கு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.