மாவட்ட செய்திகள்

கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி + "||" + Attempt to set fire to teenager with infant seeking justice for husband's murder

கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ஜெயமணி (வயது 21). நேற்று இவர், தனது 2 வயது மகனுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற போலீசார், ஜெயமணி கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதற்குள் 2 லிட்டர் கேனில் மண்எண்ணெய் இருந்தது. போலீசார் விசாரித்த போது, அவர் தனது குழந்தையுடன் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனை எடுத்து வந்ததாக கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலர் என்னுடைய கணவரை சீட்டு விளையாட அழைத்துச் சென்று தகராறு செய்து அவரை தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு நிவாரணம்

இந்த கொலை குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை மட்டும் கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்யவில்லை. எனவே எனது கணவர் சாவுக்கு நீதி வேண்டும். மேலும், வாழ்வாதாரம் ஏதுமின்றி தவிக்கும் எனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்“ என்றார்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக ஜெயமணியை போலீசார் கைது செய்து, தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை தூக்கிக்கொண்டு இளம்பெண் மண்எண்ணெயுடன் வந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் குடும்பத்தகராறில் பயங்கரம் பெட்ரோல் ஊற்றி கணவர் எரித்துக்கொலை மனைவியும் தற்கொலைக்கு முயற்சி
ஈரோட்டில் குடும்பத்தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவியும் தற்கொலைக்கு முயன்றார்.
2. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய படைகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ஆயுத கடத்தல் முயற்சியை இந்திய படைகள் முறியடித்துள்ளன.
4. கொடுமுடி அருகே நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி தாய் கையை அறுத்து தற்கொலை முயற்சி
கொடுமுடி அருகே நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசிய தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
5. தூத்துக்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி
தூத்துக்குடி உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.