மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை குறைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம் + "||" + On the way to the hospital The delay should be minimized Governor Kiranpedi Option

மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை குறைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்

மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை குறைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை குறைக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கலெக்டர் அருண் ஆகியோருடன் மத்திய உள்துறை அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்கள்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தில் முதுநிலை அதிகாரிகள் திருப்தி அடைந்தாலும் வேகத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான மேம்பாடுகளுக்கு மேலும் பொறுப்பான வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கினர்.

குறிப்பாக மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளின் தாமதத்தை எவ்வாறு குறைப்பது? வீடுகளில் ஆய்வை அதிகரிப்பது, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் மீது கவனத்தை அதிகரித்தல், கொரோனா பாதிப்பு இல்லாதவர்களின் மீதும் கவனம் செலுத்துதல் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

இதன்படி செயல்பட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்கள் எல்லாம் பண்டிகை காலங்களாக உள்ளது. இதை செய்யாவிட்டால் நமது செயலில் நாம் முன்னேற்றத்தை இழக்கநேரிடும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.