மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை + "||" + Fever test at Dindigul railway station with modern scanner for passengers

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 10 சிறப்பு ரெயில்கள் நின்று செல்கின்றன.

இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே, பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தொடக்கத்தில் வழக்கமான தெர்மல்ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனால் ரெயில்வே அதிகாரிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதை தவிர்க்கும் வகையில் தற்போது நவீன வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெயில்வே அதிகாரிகள் அமர்வதற்கு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் முதலாவது நடைமேடைக்குள் நுழையும் இடத்தில் கண்காணிப்பு கேமரா வடிவிலான நவீன ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த கருவி மூலம் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த கருவி பயணிகளை ஸ்கேன் செய்து, உடல்வெப்பநிலையை கணக்கிட்டு, பயணியின் புகைப்படத்துடன் கணினிக்கு அனுப்பி வைக்கிறது. அதை ரெயில்வே அதிகாரிகள் கணினியில் பதிவு செய்வதோடு, டிக்கெட்டை வாங்கி சோதனை செய்துவிட்டு பயணிகளை உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. காய்ச்சல், சளி அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு
காய்ச்சல், சளி அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
3. கொரோனா சிகிச்சை, பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வகங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வகங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
4. வேடிக்கை காட்சியான கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை என்பது சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது.
5. கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்வு சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.