மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா + "||" + Anna's birthday party at Jolarpettai, Tirupati

திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா

திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா
திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பேட்டை ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட இணைச் செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணி வரவேற்றார். இதில் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.நாகேந்திரன், தகவல் தொழில் நுட்ப நகர செயலாளர் மகேஸ்வரன், தம்பா கிருஷ்ணன், வீடியோ சரவணன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மடவாளம், குரிசிலாப்பட்டு, பெருமாபட்டு உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் டாக்டர் எம்.திருப்பதி (தெற்கு), பி.கே.சிவாஜி (வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கி அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாகரன், டிவி.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சின்னப்பையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சி.செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குமார், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர்.வாசுதேவன், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர் செல்வராஜ், தொழில் அதிபர் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பி.ஜி.சரவணன், நடராஜன், யுவராஜ், ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் தேவராஜ் மாலை அணிவித்தார். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி.கே.மோகன், மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வா.கண்ணதாசன் தலைமையில், புதுப்பேட்டை ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் டி.கே.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் வில்வநாதன், பொன்னுசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நகர அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் அட்சையா முருகன் தலைமையில், அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் விவசாயப்பிரிவு செயலாளர் எஸ்.பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் நசீமாகாலுபாய், மாவட்ட பாசறை செயலாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் கடை தெரு சினிமா ரோடு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் தலைமை தாங்கி, அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகம், பொருளாளர் கோவிந்தசாமி, அவைத்தலைவர் கிருஷ்ணன், இளைஞர் அணி பாசறை செயலாளர் ஏழுமலை, வார்டு செயலாளர் கொவுஸ்பாய் உள்பட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புத்துக்கோயில் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலாளர் எம்.முருகன் தலைமை தாங்கி, அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே திருப்பத்தூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புலவர் ஆர்.ரமேஷ் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் நாட்டறம்பள்ளி நகர செயலாளர் மகான், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் டைகர் இளங்கோ, நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி தலைமையிலும், நகர கழக பொறுப்பாளர் ம.அன்பழகன் முன்னிலையிலும் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் கலந்துகொண்டு அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான ஆ.சம்பத்குமார் தலைமையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள், தி.மு.க. கட்சியின் தொடக்க நாள் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். விழாவில் ஜோலார்பேட்டை முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் காளியப்பன், இனியன், குணசேகரன், பாஸ்கர் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, ஊராட்சி கழக தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.