மாவட்ட செய்திகள்

டி.வி. பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + TV Because the father rebuked what he saw 9th grade student Suicide by hanging

டி.வி. பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

டி.வி. பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திசையன்விளையில் டி.வி. பார்த்ததை தந்தை கண்டித்ததால், 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விஜய அச்சம்பாட்டைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகராசி (45). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இளைய மகன் சக்திகரன் (வயது 15), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவன் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் நீண்ட நேரமாக டி.வி. பார்த்து கொண்டிருந்தான். இதனை தந்தை முருகன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த சக்திகரன், வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

நேற்று அதிகாலையில் கண்விழித்த பெற்றோர் தங்களுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சக்திகரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. பார்த்ததை தந்தை கண்டித்ததால், 9-ம் வகுப்பு மாணவன் விபரீத முடிவாக தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை