மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை + "||" + Firefighters rehearse at Tanjore Collector's Office on rescuing people trapped in apartment buildings

அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் விபத்து மீட்பு பணி செயல்முறை விளக்கத்தில் வெடி விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்யப்பட வேண்டிய முதலுதவி, மனித உயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல் மற்றும் புகை சூழ்ந்த அறையில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டல் போன்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தீ விபத்து

வாகன விபத்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் மற்றும் கட்டிட விபத்துகளில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளான கட்டர், ஸ்பீரிட்டர், ஏர் லிப்ட்டிங் மூலமும், குடிசை பகுதிகளில் ஏற்படுகின்ற தீ விபத்துகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போதும் தீயணைக்கும் முறையினை பற்றியும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பயிற்சி கலெக்டர் அமித், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை
மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை நேற்று நடந்தது. அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு குதிரைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. புதுவை, காரைக்காலில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை
புதுவை, காரைக்காலில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
3. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு செயல் விளக்க ஒத்திகை
நவீன பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு அடங்கிய இந்த தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க முகாம் நடைபெற்றது.
4. கன்னியாகுமரி அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை: குளத்தில் தத்தளித்த 5 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்
கன்னியாகுமரி அருகே நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது நரிக்குளத்தில் தத்தளித்த 5 பேரை தீயணைப்பு படையினர் தத்ரூபமாக மீட்பது போல் நடித்து காட்டினர்.
5. குற்றாலத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது
தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.