மாவட்ட செய்திகள்

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல் + "||" + Transfer to 9 officers in Kumari, Promotion Collector Information

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரியாஸ் அகமது, கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று இடமாற்றப்பட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சொர்ணபிரதாபன் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பதவி உயர்த்தப்பட்டார்.

அகஸ்தீஸ்வரம் வட்டம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய கந்தசாமி, தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பணி மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகன், மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளரான சரஸ்வதி, தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த ஆறுமுகம் தற்போது தோவாளை வட்டம் மண்டல துணை தாசில்தாராகவும், தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த குழந்தைராணி நாச்சியார் தற்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

துணை தாசில்தாராக பதவி உயர்வு

நாகர்கோவிலில் உள்ள உதவி ஆணையர்(ஆயம்) அலுவலத்தில் 2-ம் நிலை கணக்கராக பணியாற்றிய பாலதீபா தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராக(எல் பிரிவு) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்டம் தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த தனலட்சுமி பதவி உயர்வின் மூலம் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
2. வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பது எப்படி? அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை
வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதையொட்டி அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.
3. விரைவில் அனைவருக்கும் மின்சார ரெயிலில் அனுமதி மந்திரி விஜய் வடேடிவார் தகவல்
மும்பையில் விரைவில் அனைவரும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.
4. அனுமதி பெறாத மனைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
அனுமதி பெறாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
5. இணையதளம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
இணையதளம் மூலம் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.