மாவட்ட செய்திகள்

சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு + "||" + Corporation Commissioner inspects the construction of a park on Salem Pallappatti Lake

சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார்.
சேலம்,

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.916 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூரமங்கலம் மண்டலம் பள்ளப்பட்டி ஏரியை ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தி, பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளப்பட்டி ஏரியினை மேம்படுத்தி, பல்வேறு அம்சங்கள் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 44.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொழுதுபோக்கு பூங்கா

அதனடிப்படையில், ஏரியின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள், படகு இல்லம், சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், குழந்தைகளை கவரும் வண்ணம் செயற்கை நீரூற்றுகள், விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு பூங்கா அமைத்தல் மற்றும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடைமேடை, மிதி வண்டி ஓட்டும் தளம், உணவகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு, நவீன சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு
நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
2. நெல் கொள்முதல் குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாகையில், மத்திய குழுவினர் பேட்டி
22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நாகையில், மத்தியக்குழுவினர் கூறினர்.
3. நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி நேற்று ஆய்வு செய்தார்.
4. சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி அமையும் இடத்தை, அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.
5. வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று எடியூரப்பா நேரில் ஆய்வு
வட கர்நாடகத்தில் மழை- வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.