மாவட்ட செய்திகள்

சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு + "||" + Public road blockade demanding to provide hygienic drinking water 2 hours traffic impact

சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வசிஷ்டபுரத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்களமேடு,

மங்களமேடு அருகே உள்ள வசிஷ்டபுரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக சில இடங்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் குடிக்க பயன்படுத்த நிலையில் உவர்ப்புத்தன்மையோடு, சுகாதாரமற்ற நிலையில் வந்தது. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் கூறியும், மனு கொடுத்தும் இதுவரை சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வசிஷ்டபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்க கோரியும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளரை எந்தவித காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டிப்பதாகவும் கூறி, அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அகரம்சிகூர்- செந்துறை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 409 பேர் கைது
சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 409 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 429 பேர் கைது
பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 429 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்
அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் சாலைமறியல் 442 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 442 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை