மாவட்ட செய்திகள்

டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது + "||" + CBI raids DK Sivakumar's house The Modi government is engaging in reprehensible politics of revenge

டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது

டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது
டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் டி.கே.சிவக்குமார் வீட்டிலும், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யின் வீடு, அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டில் நடந்த சோதனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

பழிவாங்கும் அரசியல்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்தி உள்ளது. இது பழிவாங்கும் அரசியல் செயலாகும். காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பா.ஜனதா தலைவர்கள் கீழ் மட்ட அரசியலில் ஈடுபடுகிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். டி.கே.சிவக்குமார் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்தி காங்கிரஸ் தலைவர்களின் சக்தியை குறைக்க நடக்கும் சதியாகும். இது மக்களின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் முயற்சியாகும். சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை ஒடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்
2. கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் நீடித்த சித்தராமையா ஆட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு
கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் 5 ஆண்டு கால ஆட்சியை சித்தராமையா நடத்தினார் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.
3. மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
4. அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
5. மின்சார துறைக்கு நிதி உதவி கிடைக்கவில்லை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மீது காங்கிரஸ் மந்திரி குற்றச்சாட்டு
மின்சார துறைக்கு உதவ துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் நிதித்துறைக்கு 8 முறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரசை சேர்ந்த மந்திரி நிதின் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை