மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம் + "||" + BSNL Employees are fasting

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
தமிழகம்- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,

பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவினை கைவிட வேண்டும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம்- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுவை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

உண்ணாவிரதத்துக்கு மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியன், செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். உண்ணாவிரதத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் (செவ்வாய்க் கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.3½ கோடி தங்கம் சிக்கியது தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
2. கான்பெட் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் போராட்டம்
காரைக்காலில் 10 மாதங்களாக மூடி கிடைக்கும் கான்பெட் பெட்ரோல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நள்ளிரவு வரை நீடித்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவையில் உள்ள 2 ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 38 மாத சம்பளம் கேட்டு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 38 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.