மாவட்ட செய்திகள்

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Liberation Tigers of Tamil Eelam (LTTE) protest against the Uttar Pradesh incident

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
காஞ்சீபுரம்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்ததை கண்டித்து காஞ்சீபுரம் சங்கரமடம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜி.வி மதியழகன், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், காஞ்சீபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் முன்பு மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.க, தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நேற்று கோர்ட்டு ரோட்டில் உள்ள கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரியில் 8 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
5. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.