மாவட்ட செய்திகள்

சத்துணவு வேலைக்கு தென்காசி யூனியன் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் + "||" + Women gathered at the Tenkasi Union office for nutrition work

சத்துணவு வேலைக்கு தென்காசி யூனியன் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

சத்துணவு வேலைக்கு தென்காசி யூனியன் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
சத்துணவு வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்க தென்காசி யூனியன் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.
தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஆகிய வேலைக்கு 114 காலியிடங்கள் இருப்பதாகவும், அதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்து இருந்தார். இதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த பணிகளுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள யூனியன் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெண்கள் விண்ணப்பங்களை கொடுத்து வருகிறார்கள்.

பெண்கள் குவிந்தனர்

இந்த நிலையில் தென்காசி யூனியன் அலுவலகத்தில் நேற்று விண்ணப்பங்கள் கொடுக்க ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் விண்ணப்பங்களை கொடுத்த னர். இந்த பணி தற்காலிக பணியாகும். மேலும் இதற்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. ஆனாலும் நேற்று வந்திருந்தவர்களில் பலர் பட்டதாரிகள். பி.ஏ.பி.எல்., பி.காம், பி.எஸ்சி., எம்.எஸ்சி போன்ற பட்டதாரிகளும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால் அதிகமான பெண்கள் வரிசையாக நின்றபோது அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.