மாவட்ட செய்திகள்

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு + "||" + Villagers protest against setting up of cell phone tower in Sivakurunathapuram area

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சுரண்டை,

தென்காசி மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன் தலைமையில், தாசில்தார் முருகு செல்வி முன்னிலையில் நடந்தது.

இதில் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். மேலும் சுரண்டை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தெருநாய்கள் மக்களை அச்சுறுத்துவதை தடுக்க கோரியும், சுரண்டையில் யூனியன் அலுவலகம் அமைக்க கோரியும், பலபத்திரராமபுரம் கிராமம் மருதாதத்தாள்புரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க கோருதல் இலவச வீட்டுமனை பட்டா கேட்டல் உட்பட 23 மனுக்கள் பெறப்பட்டன.

வாரந்தோறும்...

இம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கூறுகையில்,‘ மனுக்கள் தென்காசி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும்’ என்றார். முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு
தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 26-ந்தேதி முழுஅடைப்பு
புதுவையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
3. ஏரல் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஏரல் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
4. மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு துணிகள் எடுக்க குவிந்த மக்கள் கூட்டம்
மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க மக்கள் கூட்டம் குவிந்திருந்தன. அதேபோல் பட்டாசுகள் வாங்கவும் ஆர்வம் காட்டினர்.
5. மதகடிப்பட்டு வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை