மாவட்ட செய்திகள்

புனே மாநகராட்சி அலுவலகம் சூறை முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் கைது + "||" + Pune Corporation Office Robbery Former BJP MLA 39 people were arrested, including

புனே மாநகராட்சி அலுவலகம் சூறை முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் கைது

புனே மாநகராட்சி அலுவலகம் சூறை முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் கைது
புனே மாநகராட்சி அலுவலகத்தை சூறையாடி ரகளையில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே,

புனே மாநகராட்சி சார்பில் கோண்ட்வாவில் உள்ள ஏவ்லேவாடி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இது குறித்து ஹடப்சர் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ் திலேக்கரிடம் முறையிட்டனர்.

இதனால் அவர் புனே மாநகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினையை சரிசெய்து தரும்படி கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. கைது

இதனால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் திலேக்கர் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த கோப்புகளை தூக்கிவீசி எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இது பற்றி தகவல் அறிந்த சுவர்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முன்னாள் எம்.எல்.ஏ. யோகேஷ் திலேக்கர் உள்பட அவரது ஆதரவாளர்கள் 39 பேரை கைது செய்தனர். இதில் 4 கவுன்சிலர்களும் அடங்குவர். மேலும் அவர்கள் மீது பொது சொத்தை சேதபடுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா
கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி நிலம் வழங்கியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நெல்லை கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகை மீண்டும் வேலை வழங்க கோரிக்கை
கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மீண்டும் வேலை வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
3. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.
4. கோவில்பட்டி கிழக்கு போலீசாரை கண்டித்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி கிழக்கு போலீசாரை கண்டித்து நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழுவினர் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை