மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை + "||" + ICourt advises government to allow public on electric trains

மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை

மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை
மின்சார ரெயில்களில் செல்ல பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை கூறியுள்ளது.
மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்கள் தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்சார ரெயில்களில் செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு துறைகள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கி உள்ளது. மேலும் பல துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசை அறிவுறுத்தினர்.

மேலும் வக்கீல்கள் மற்றும் எங்களது ஊழியர்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டும் எங்களது ஆலோசனை அல்ல. அது பொதுமக்களுக்கும் தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதித்ய தாக்கரே

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்தபோது, பொதுமக்கள் மின்சார ரெயில்களில் செல்வதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் (இந்த மாதம்) 15-ந் தேதிக்குள் பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு
சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தின் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
2. சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது ஏன்? நடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய போலீசாருக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனா ரணாவத் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
4. 2-வது தவணை கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி
75 சதவீத கல்வி கட்டணத்தில் 2-வது தவணையான 35 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. மெகா ஏலத்தில் தோனியை தக்க வைக்க வேண்டாம்; சி.எஸ்.கே.வுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் தோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.