மாவட்ட செய்திகள்

பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் தாய், குழந்தை பலி விசாரணை நடத்த உத்தரவு + "||" + Ordered to conduct mother-infant death investigation as excessive bleeding during childbirth was waived

பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் தாய், குழந்தை பலி விசாரணை நடத்த உத்தரவு

பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் தாய், குழந்தை பலி விசாரணை நடத்த உத்தரவு
பிரசவம் ஆன பெண்ணுக்கு ஏற்பட்ட ரத்தபோக்கிற்கு, சிகிச்சை கிடைக்காமல் நடந்த அலைக்கழிப்பால் தாய், குழந்தை பலியாகினர். இது பற்றி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை,

மும்பை புறநகர் பகுதியான கர்ஜத் பிட் கிராமத்தை சேர்ந் தவர் பூனம் ருத்தே (வயது22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, கடந்த 4-ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் பிரவச வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் நேரலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூனம் ருத்தேவை அழைத்துசென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு பணியில் டாக்டர் இல்லாததால் நர்சு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அப்போது பிறந்த குழந்தை அழவில்லை.

ரத்தப்போக்கு

மேலும் பூனம் ருத்தேவிற்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க டாக்டர் அங்கு பணியில் டாக்டர் இல்லாததால் தாயையும், சேயையும் கர்ஜத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன் சில் அனுப்பி வைத்தனர்.

அங்கும் டாக்டர் இல்லாததால் கலம்பொலியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு இருவரையும் கொண்டு செல்ல அங்கிருந்த ஊழியர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் அங்கு சென்றபோது சிகிச்சை கிடைக்காமல் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. மேலும் பூனம் ருத்தேவிற்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் மயக்கமடைந்தார்.

தாயும் பலி

இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்னர் அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே பூனம் ருத்தேவும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். காலை 7 மணி அளவில் பிரசவம் ஆன பூனம் ருத்தேவிற்கு ரத்த போக்கிற்கு சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிர் இழந்ததாகவும், இதற்கு டாக்டர்கள், நர்சுகள் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ராய்காட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுதாகர், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசின் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை உறுதி செய்யுங்கள்; அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு
அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில் அதனை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
2. முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்
முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள கைதான போலீஸ் அதிகாரி சதி திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
3. பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
4. ராணிப்பேட்டை கலெக்டருக்கு கொரோனா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி
ராணிப்பேட்டை கலெக்டருக்கு கொரோனா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி.
5. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எத்தனை ஊழல் வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் கையாண்டுள்ளனர்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.