மாவட்ட செய்திகள்

அமைந்தகரையில் தனியார் அலுவலகத்தில் தீ விபத்து 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம் + "||" + A fire broke out at a private office in Aminthakarai, destroying 30 computers and important documents

அமைந்தகரையில் தனியார் அலுவலகத்தில் தீ விபத்து 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

அமைந்தகரையில் தனியார் அலுவலகத்தில் தீ விபத்து 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
அமைந்தகரையில் 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 5-வது மாடியில் உள்ள தனியார் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது.

நேற்று காலை இந்த அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் 5-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் எரிந்த தீயை சுமார் ஒருமணி நேரமாக போராடி அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், ஏ.சி. எந்திரம், மேஜை, நாற்காலிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

மின்கசிவு காரணமா?

தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும், காலை நேரத்தில் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகூர், காரைக்கால் பகுதியில் தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து நாசம்
பாகூர், காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
2. திருமுடிவாக்கம் சிப்காட்டில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
திருமுடிவாக்கம் சிப்காட்டில் உள்ள சோபா தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
3. ஒசகுட்டதஹள்ளி தொழிற்சாலையில் தீ விபத்து: விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
ஒசகுட்டதஹள்ளி தொழிற்சாலை தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
4. பெங்களூருவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக ரசாயனம் பதுக்கி வைத்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
5. பெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.45 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதில், தீயணைப்பு படைவீரர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.