மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 324 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district, 324 people were affected by the corona infection in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 324 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 324 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். தொற்றின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 103 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 657 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 252 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்து 675 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 1,732 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 570 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த 32 வயதுடைய ஆண், மணிமங்கலத்தை சேர்ந்த 42 வயது ஆண், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 138 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 781 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 895 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 340 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 3 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
2. அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
3. அரவக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: முருங்கை விற்பனை பாதிப்பு
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் அதிக அளவு முருங்கை பயிரிட்டு இருந்தனர்.
4. கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார்.
5. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை