மாவட்ட செய்திகள்

டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது + "||" + The person who carried the explosives in the tractor was arrested

டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது

டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது
சங்கரன்கோவில் அருகே டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது.
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அருகே ஆனையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது டிராக்டரில், கிணறு வெட்ட பயன்படுத்தும் வெடிப்பொருட்களை உரிய பாதுகாப்பின்றி அஜாக்கிரதையாக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை ஓட்டி வந்த கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தைச் சேர்ந்த கோபாலை (55) போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் அதில் இருந்த 39 குப்பிகளுடன் கூடிய வெடிப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முத்துசாமியாபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி கைது
சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் சதீஷ்குமார்.
2. வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது
வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது.
3. நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் சாராய வியாபாரி கைது
நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
4. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: செவிலியர் பலி; கணவர் படுகாயம் டிரைவர் கைது
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதியதில் செவிலியர் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5. வாகனங்களை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது
வாகனங்களை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது.