மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம் + "||" + Truck drivers protest near Thoothukudi port

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்
தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துறைமுகத்துக்கு சரக்கு ஏற்ற செல்லும் லாரிகளில் டிரைவர் மட்டுமே இருக்க வேண்டும். கிளீனர்கள் உடன் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துறைமுகத்துக்குள் நெருக்கடியான நேரத்தில் லாரியை இயக்குவதற்கு சிரமப்பட்டு வந்தனர்.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கிளீனர்களை துறைமுகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லாரி டிரைவர்கள் நேற்று அந்த பகுதியில் உள்ள எடைநிலையம் அருகே தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகன் தலைமையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துறைமுக போக்குவரத்து அதிகாரி வந்த பிறகு பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்
நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும்; கெஜ்ரிவால் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
3. மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொழிற்சங்கத்தினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
கோவையில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. தொழிற்சங்கத்தினர் மறியல்-முற்றுகை போராட்டம் 180 பெண்கள் உள்பட 845 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 180 பெண்கள் உள்பட 845 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை