மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை + "||" + Electrician killed in Thoothukudi: Relatives besiege police station

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
தூத்துக்குடியில் விபத்தில் இறந்த எலக்ட்ரீசியனின் உறவினர்கள், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி டி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் சங்கர் என்ற சின்னா (வயது 37). இவர் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் மைதானத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

முற்றுகை

இந்த நிலையில் இறந்த சங்கரின் உறவினர்கள் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்பாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஸ்ரீவில்லிபுத்தூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. நரிக்குறவர் இளைஞர் திருமணத்திற்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்ற உறவினர்கள்
நரிக்குறவர் இளைஞர் திருமணத்திற்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்ற உறவினர்கள்
4. இலவச மடிக்கணினி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசு பள்ளி மாணவிகள் முற்றுகை
இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசு பள்ளி மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.