மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 358 பேர் பலி + "||" + Another 358 killed in Corona in the Marathas

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 358 பேர் பலி

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 358 பேர் பலி
மராட்டியத்தில் மேலும் 358 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 13 ஆயிரத்து 395 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 93 ஆயிரத்து 884 ஆகி உள்ளது. இதில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 441 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்து 575 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

358 பேர் பலி

மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 81.13 ஆக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள போதும் பலி எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நேற்று மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு புதிதாக 358 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 39 ஆயிரத்து 430 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 22 லட்சத்து 84 ஆயிரத்து 204 பேர் வீடுகளிலும், 25 ஆயிரத்து 321 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது 6 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 970 பேர் பாதிக்கப்பட்டனர்.
2. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1½ கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1½ கோடியை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,619 பேர் பலியாகி உள்ளனர்.
3. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
4. கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
5. கொரோனா பரவல் அதிகரிப்பால் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை மீண்டும் ரத்து
கொரோனா பரவல் அதிகரித்ததால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசுகிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை