மாவட்ட செய்திகள்

மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு + "||" + A case has been registered against 6 persons, including a policeman, for cutting a scythe near a worker near Manor

மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு

மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு
மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தென்கலம்புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49) கூலி தொழிலாளி. இவருடைய மகன் முத்துக்குமார். இவர் அதே ஊரைச் சேர்ந்த முருகையா மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி, முத்துக்குமார் ஆகியோர் தென்கலம்புதூர் பஜாரில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த முருகையா, அவரது தம்பி ஆறுமுகம் உள்பட 6 பேர் சேர்ந்து தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் சேர்ந்து முத்துக்குமாரை ஹெல்மெட்டால் தாக்கியும், கருப்பசாமியை அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி, முத்துக்குமார் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

6 பேர் மீது வழக்கு

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது நிசார் அகமது, முருகையா, ஆறுமுகம், உறவினர்களான செல்வி, முத்துமாரி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். இதில் ஆறுமுகம் போலீஸ்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
நிலத்தகராறில் தே.மு. தி.க. பிரமுகரை வெட்டிக்கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கள்ளக்குறிச்சியில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: துணை நடிகை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலம்
கள்ளக்குறிச்சியில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: துணை நடிகை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலம் அக்கா-தங்கை கைது.
3. திண்டுக்கல்லில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை தடுக்க வந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு
திண்டுக்கல்லில், வீடு புகுந்து தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
4. செங்கல்பட்டு அருகே பெட்ரோல் குண்டு வீசி 3 பேருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு அருகே பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது உறவினர்கள் மறியல்
மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.