மாவட்ட செய்திகள்

உடன்குடி வட்டாரத்தில் கடைகளில் தசரா பொருட்கள் விற்பனைக்கு குவிப்பு பக்தர்கள் உற்சாகம் + "||" + Concentrated devotees are encouraged to sell Dasara products in shops in the Udankudi area

உடன்குடி வட்டாரத்தில் கடைகளில் தசரா பொருட்கள் விற்பனைக்கு குவிப்பு பக்தர்கள் உற்சாகம்

உடன்குடி வட்டாரத்தில் கடைகளில் தசரா பொருட்கள் விற்பனைக்கு குவிப்பு பக்தர்கள் உற்சாகம்
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள கடைகளில் தசராவுக்கு வேடம்அணியும் பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள், இந்த பொருட்களை உற்சாகத்துடன் வாங்கி செல்கின்றனர்.
உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை செலுத்துவதற்காக காளி அம்மன், பார்வதி, சக்தி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சுவாமி வேடங்கள் அணிவார்கள். மேலும் குரங்கு கரடி புலி சிங்கம் முயல் போன்ற 50-க்கும் மேற்பட்ட மிருகங்களின் வேடங்களையும் பெண் வேடம், போலீஸ்காரர்கள் வேடம் உட்பட வித விதமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

கடைகளில் குவிந்துள்ள வேட பொருட்கள்

பின்பு வசூல் செய்த காணிக்கையை கோவிலில் கொண்டு சேர்ப்பதுதான் தசரா திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். தசரா பக்தர்களின் வேடங்களுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள், முகப்பவுடர், தலைக்கிரீடம், காளி சுவாமிக்கு தேவையான கைகள், கண்மலர், வாள், ஈட்டி, கத்தி, கம்பு போன்ற தசரா பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உடன்குடி வட்டார பகுதியிலுள்ள கடைகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தற்போது தசரா பக்தர்கள், தங்கள் தேவைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். உடன்குடி சுற்றுப்புற பகுதியில் தசரா களைகட்ட தொடங்கிவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2. அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
3. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி நேற்று தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.