மாவட்ட செய்திகள்

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம் + "||" + Porridge distilleries protest on the road demanding free manipatta

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம்

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம்
இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம் நடத்தினர்.
வில்லியனூர்,

வில்லியனூர் மூர்த்தி நகர் கூடப்பாக்கம் சாலையில் பல ஆண்டுகளாக நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இலவச மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலவச மனைப்பட்டா கேட்டு புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் இயக்கம் சார்பில் கூடப்பாக்கம் சாலையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், நிர்வாகிகள் செல்வநாதன், எழில்மாறன், தமிழ்வளவன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கஞ்சி காய்ச்சினர்

போராட்டத்தில் பங்கேற்ற நரிக்குறவர்கள் சாலையில் கற்கால் அடுப்பு அமைத்து கஞ்சி காய்ச்சினர். மேலும் அவர்கள் சாலையில் ஆமைகளை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக போராடிய பத்திரிகை அதிபருக்கு சிறை
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
2. முற்றுகை போராட்டம் எதிரொலி; அதிகாரிகளின் அனுமதியுடன் செயல்பட்ட கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள்; வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள் அனுமதியுடன் கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள் செயல்பட்டன.
3. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
4. டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. பஞ்சாப்பில் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டம்
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு உயர்வால் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.