மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 95 ஆயிரத்து 301 பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 26,132 பேர் கொரோனாவால் பாதிப்பு + "||" + 95,301 people tested in a single day In the last 5 days in Tamil Nadu 26,132 people were infected with corona

ஒரே நாளில் 95 ஆயிரத்து 301 பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 26,132 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஒரே நாளில் 95 ஆயிரத்து 301 பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 26,132 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 5 நாட்களில் 26,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,164 ஆண்கள், 2,021 பெண்கள் என மொத்தம் 5,185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 19 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 80 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 605 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 26,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,288 பேரும், கோவையில் 397 பேரும், செங்கல்பட்டில் 343 பேரும், சேலத்தில் 295 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் 26 ஆயிரத்து 132 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 79 லட்சத்து 6 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 244 ஆண்களும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 853 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 31 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 24 ஆயிரத்து 665 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 253 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

68 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், வேலூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும், தருமபுரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூரில் தலா ஒருவரும் என 23 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 10,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,347 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 357 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 44 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 79 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. 3 பேருக்கு தொற்று ஏற்பட்ட தெருப்பகுதி தகரத்தால் அடைப்பு
அரியலூரில் ஒரே நாளில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு தொற்று ஏற்பட்ட தெருப்பகுதி தகரத்தால் அடைக்கப்பட்டது.
3. கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை
கொரோனா பரவலை கண்காணிக்க சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்
4. 48 பேருக்கு கொரோனா தொற்று
48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
5. கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா
கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.