மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார் + "||" + Vijaykanth returned home after treatment at the hospital

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்
மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.
ஆலந்தூர்,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த மாதம் 28-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து கடந்த 2-ந் தேதி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இருவரும் வீடு திரும்பினார்கள்.

வீடு திரும்பினார்

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி விஜயகாந்துக்கு உடல் சோர்வு மற்றும் லேசான மயக்கமாக இருப்பதாக கூறி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததில் நல்ல உடல் நலத்துடன் முன்னேற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்துக்கு மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் கதிரியக்க பரிசோதனையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஜயகாந்த், நேற்று பகல் 1.10 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்
அருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.
2. வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு
தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வீதி, வீதியாக வேனில் உட்கார்ந்தபடி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
3. ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு
ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு.
4. விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை