மாவட்ட செய்திகள்

ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு + "||" + District Police Superintendent participates in the inauguration ceremony of surveillance cameras at a cost of Rs. 300 lakhs

ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உளுந்தை, உளுந்தை காலனி, முத்திரிபாளையம், உப்பரபாளையம், வடுகர்காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முக்கிய சாலைகள் சாலை சந்திப்பு பகுதி, ரேஷன் கடை, பள்ளி வளாகம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை போன்ற முக்கிய இடங்களில் 97 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.

மேலும் இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் தெரியும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கினார். கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கலந்துகொண்டு உளுந்தை கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம்; போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
2. கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
4. எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் அரிசி வியாபாரியிடம் போலீஸ் தீவிர விசாரணை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அரிசி வியாபாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
5. தூத்துக்குடியில் போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி நேற்று தொடங்கியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை