மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில், அம்மா மருந்தகத்தில் கொள்ளையடித்த முதியவர் கைது + "||" + In Srivilliputhur, an elderly man was arrested for robbing his mother at a pharmacy

ஸ்ரீவில்லிபுத்தூரில், அம்மா மருந்தகத்தில் கொள்ளையடித்த முதியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில், அம்மா மருந்தகத்தில் கொள்ளையடித்த முதியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மா மருந்தகத்தில் கொள்ளையடித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் அம்மா மருந்தகம் உள்ளது. இந்த அம்மா மருந்தகத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் அங்கிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த மருந்துகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சைக்கிளில் பின்னால் இருந்த மூடையை சோதனை செய்தனர்.

அதில் பணம் மற்றும் மருந்துகள் இருந்தன. தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தியதில் நெல்லை பகுதியை சேர்ந்த ஷேக் மதார் (வயது 62) என்பதும், அம்மா மருந்தகத்தில் பணம் மற்றும் மருந்தை கொள்ளையடித்தும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்று ம் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.