மாவட்ட செய்திகள்

ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து திருவாரூர் அருகே, அ.ம.மு.க.வினர் சாலைமறியல் + "||" + Road blockade by AIADMK activists near Thiruvarur condemning the taking of the Union Secretary to the police station

ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து திருவாரூர் அருகே, அ.ம.மு.க.வினர் சாலைமறியல்

ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து திருவாரூர் அருகே, அ.ம.மு.க.வினர் சாலைமறியல்
திருவாரூர் அருகே ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து அ.ம.மு.க. வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் அருகே குரும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு சம்பந்தமாக நேற்றுமுன்தினம் இரவு விசாரணைக்காக வைப்பூர் போலீசார் மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த கட்சியினர் வைப்பூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டனர்.

சாலைமறியல்

இதனையடுத்து அத்துமீறி வீடு புகுந்து மணிகண்டனை அழைத்து சென்ற போலீசாரின் செயலை கண்டித்து கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி சாலைமறியலை கைவிட்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் திருவாரூர்-நாகூர் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசார்- வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு: ஒரே இடத்தில் கூடிவிட்டு தனித்தனியாக விழிப்புணர்வு பேரணி நடத்தியதால் பரபரப்பு
கடலூரில் ஒரே இடத்தில் கூடிவிட்டு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்கி் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பெண் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
4. கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் கிரண்குராலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
5. மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற நாகை செல்வராசு எம்.பி. உள்பட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.