மாவட்ட செய்திகள்

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: சட்டசபை நோக்கி பார்வையற்றோர் ஊர்வலம் + "||" + Reservation in government employment: Blind procession towards the assembly

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: சட்டசபை நோக்கி பார்வையற்றோர் ஊர்வலம்

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: சட்டசபை நோக்கி பார்வையற்றோர் ஊர்வலம்
புதுச்சேரி பார்வையற்றோர் உரிமைக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பன் கலையரங்கம் அருகே இருந்து சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலமாக சென்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி பார்வையற்றோர் உரிமைக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பன் கலையரங்கம் அருகே இருந்து சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு இயக்கத்தின் தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் சஞ்சீவிராயன், துணைச் செயலாளர் அனந்தராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பார்வையற்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதுவையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கல்வி வழங்க அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 37 மாத நிலுவை அரிசிக்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் ஊர்வலம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் விவசாயிகள் கொட்டும் மழையில் ஊர்வலம் சென்றனர்.
2. 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மாணவர் காங்கிரசார் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
10 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்தக்கோரி புதுவையில் மாணவர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட போலீஸ்துறை சார்பில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
4. விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதனை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தொடங்கி வைத்தார்.
5. நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலம்
முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலம் சென்றனர்.