மாவட்ட செய்திகள்

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு + "||" + Intensity of work to make Krumambakkam Big Lake a modern tourist destination Minister Kandasamy inspected

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு
கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் நடைபெற்று வரும் சுற்றுலா திட்ட பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாகூர்,

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நவீன சுற்றுலாத்தலமாக மாற்ற அமைச்சர் கந்தசாமி சுற்றுலாத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 கோடி செலவில் நவீன சுற்றுலா தலமாக்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு உணவகம், சிறுவர் பூங்கா, படகு குழாம், ஏரிக்கு வரும் பறவைகளை காண்பதற்காக உயரமான கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் ஏரிகரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.

வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்

இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையரும், அலுவலக உதவி இயக்குனருமான வினோத்குமாருடன் சுற்றுலா திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் கடைகள் அமைப்பது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் பிரிவு செயற்பொறியாளர் ரமணி, இளநிலை பொறியாளர் பாலாஜி, சுற்றுலாத்துறை மேலாளர் பூபாலன், கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரங்கநாதன், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புயல் முன்னெச்சரிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
2. நன்னிலம் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
நன்னிலம் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
3. மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4. புரெவி புயலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
புரெவி புயலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.
5. அரசு சிமெண்டு ஆலையில் நிரந்தர பணி கேட்ட ஆனந்தவாடி கிராம மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் அமைச்சர் தகவல்
அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக, அந்த கிராம மக்களுடனான ஆலோசனை கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.