மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது + "||" + In Tiruvallur, the farmers' grievance day meeting was held under the chairmanship of the Collector through a video presentation

திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது

திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் காணொலி காட்சி வாயிலாக மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடம் உரையாடினார். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு முறையிட்டனர்.அதன்மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் சம்பத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்
வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டி, கல்பாரப்பட்டி, சீரகாபாடி, சேனை பாளையம், ராக்கி பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது.
2. ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம்
ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.
3. தர்மபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை குறித்த கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிப்பது தொடர்பாக நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.
4. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கும் தேர்தல் தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் கனிமொழி எம்.பி. பேச்சு
வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கும் தேர்தல், தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.