பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தகவல் + "||" + Perambalur, Kunnam In Assembly constituencies There are a total of 652 polling stations With all party representatives Information at the consultation meeting
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தகவல்
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் திருத்தம் தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 18 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 11 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கபட்ட விவரமும் மற்றும் பள்ளி கட்டிடத்தின் பெயர் திருத்தத்தின் காரணமாக குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்ட விவரத்தினையும் கலெக்டர் சாந்தா தெரிவித்தார். தற்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனைகள் தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தாரிடம் தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கு வாக்காளர்களுக்கு உதவி செய்திடும் பொருட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யலாம், என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக அலுவலர் கிருஸ்டி, வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தேர்தல் பிரிவு தாசில்தார் துரைராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான அ.தி.மு.க., தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.