கொரோனா பரிசோதனையை குறைத்ததால் தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் கடிதம் + "||" + Because the corona reduced the test The risk of infection is reduced
Chief - Minister letter from Patnavis
கொரோனா பரிசோதனையை குறைத்ததால் தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் கடிதம்
கொரோனா பரிசோதனையை குறைத்ததால், தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது என்றும், எனவே பரிசோதனை எண்ணிக்கையை அதிகாிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். எனவே சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினமும் சராசாியாக 84 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேமாதம் 16 முதல் 30-ந் தேதி வரை சராசரியாக தினமும் 91 ஆயிரத்து 743 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 1 முதல் 15 வரை தினமும் 75 ஆயிரத்து 296 பேருக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தான் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. எனவே உண்மை நிலவரத்தை அறிய கொரோனா சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.