மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: முத்தியால்பேட்டையில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் + "||" + ADMK 49th Annual Opening Ceremony Alms to a thousand poor

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: முத்தியால்பேட்டையில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம்

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: முத்தியால்பேட்டையில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம்
அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முத்தியால்பேட்டையில் ஆயிரம் ஏழைகளுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கி தொண்டர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
காஞ்சீபுரம்,

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அ.தி.மு.க.கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து முத்தியால்பேட்டையில் 1,000 ஏழைகளுக்கு இட்லி, பொங்கல், வடை உள்ளிட்ட அன்னதானங்களை காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் ஆகியோர் வழங்கினார்கள். அப்போது அறுசுவை உணவு சாப்பிட்ட அனைவரும் மகிழ்ச்சி பொங்க அ.தி.மு.க. ஆட்சி நிலைக்க வாழ்த்து கூறினர்.

பின்னர், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்து முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் ஏழை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். வழியில் முன்னால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருவில் இருக்கும் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் நல்ல பல திட்டங்களை அறிவித்து இந்த ஆட்சியை சிறப்பாக நடத்தி பாராட்டை பெற்றார். அவர் வழியிலேயே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியையும் வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றனர்.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.மகத்தான வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக அமோக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ், அக்ரி கே.நாகராஜன், மாவட்ட பொருளாளர் வீ.வள்ளிநாயகம், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் நாயகன்குப்பம் என்.ஆர்.பழனி, அம்மா பேரவை நிர்வாகி மார்க்கெட் வி.அரிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூரில் அ.தி.மு.க. வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மற்றும் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து அ.தி.மு.க.கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.

மேலும் இந்த விழாவில் அ.தி.மு.க.மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கே.பிரகாஷ் பாபு, கே.ஆர்.தருமன், தங்க பஞ்சாட்சரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கே.கங்காதரன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் என்.எஸ்.மணி,பேரூராட்சி துணை செயலாளர் வி.டி.பொன்னுசாமி மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெய விஷ்ணு, பேரூராட்சி செயலாளர் லட்சுமணன், பேரவைச் செயலாளர் துரை பாபு மற்றும் ஏராளமான அ.தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருராட்சியில் அ.தி.மு.க.வின் 49-ம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.வந்த்ராவ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவத்சலம், மாவட்ட மகளிரணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மரகதம் குமரவேல், காஞ்சீபுரம், (செங்கல்பட்டு) ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணை தலைவர் நத்தம் ஏழுமலை ஒன்றிய செயலாளர்கள் செல்வம், மாமல்லபுரம் ஜி ராகவன், விஜயரங்கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாலாஜாபாத் ஒன்றிய பேரூர் அ.தி.மு.க. சார்பில் வாலாஜாபாத் ரவுண்டானா அருகே நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆ.ரின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க.காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி.க.நாகராஜன், அத்திவாக்கம் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னேரி வரதராஜூலு, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் அரிக்குமார், நிர்வாகிகள் ஓ.வி.ரவி, என்.ஆர் பழனி மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. கட்சியின் 49-ம் ஆண்டு தொடக்க விழா நாளை முன்னிட்டு கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே நந்திவரம்-கூடுவாஞ்சேரி அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான டி.சீனிவாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத், நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ரத்தினமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. கட்சி கொடியை காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணப்பன், நிர்வாகிகள் ரங்கன், ஜான்சன், கனி என்கிற கணேஷ், துளசிங்கம், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.