மாவட்ட செய்திகள்

துலா மாத பிறப்பையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் + "||" + On the occasion of the birth of the month of Tula From the Cauvery River Bring holy water in a jug of gold Marriage to Srirangam Namperumal

துலா மாத பிறப்பையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்

துலா மாத பிறப்பையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் துலா மாத பிறப்பையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு, நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம்,

துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரி ஆறு புனிதமாவதாகவும், ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள். வழக்கமாக மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு வரப்படும்.

ஆனால் ஐப்பசி மாதம் மட்டும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ரெங்கநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன்படி துலா மாத பிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், மேலும் வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். துலா(ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள் மற்றும் தாயார் தங்க ஆபரணங்கள், சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை