மாவட்ட செய்திகள்

பால் உற்பத்தியாளர் சங்க முறைகேட்டை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலைவெறி தாக்குதல் 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு + "||" + Homicidal attack on painter who tampered with milk producers' union scandal

பால் உற்பத்தியாளர் சங்க முறைகேட்டை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலைவெறி தாக்குதல் 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

பால் உற்பத்தியாளர் சங்க முறைகேட்டை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலைவெறி தாக்குதல் 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுவை அரியூர் ஆனந்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்செந்தில்நாதன் (வயது 30), பெயிண்டர். இவரது அண்ணன் அழகிரி (34). பிளம்பர். அண்ணன்-தம்பி இருவரும் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பாலை அரியூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கொடுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் அரியூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக அழகிரி தட்டிக்கேட்டார். இதனால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒருசில நிர்வாகிகளுக்கும், அழகிரிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கொலைவெறி தாக்குதல்

இந்த நிலையில் அருண்செந்தில்நாதன் நேற்று மாலை சங்கத்தில் பால் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிச்செல்ல முயன்றார். இதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதலில் படுகாயமடைந்த அருண்செந்தில்நாதன் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இது குறித்து வில்லியனூர் போலீசில் அழகிரி புகார் செய்தார். அதில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட காரணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சங்க நிர்வாகிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை அருகே பரபரப்பு: வேனில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
குளித்தலை அருகே இளம்பெண்ணை வேனில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம்- மடிக்கணினி கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருப்பனந்தாள் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. விவசாயியை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு காரில் வந்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கல்லக்குடி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு, பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற, காரில் வந்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. தானேயில் நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தானேயில் நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. உடன்குடியில் இரும்பு பட்டறைகளுக்கு தீ வைப்பு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடியில் இரும்பு பட்டறைகளுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.