மாவட்ட செய்திகள்

சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு + "||" + 61,235 fever camps in Chennai - 30 lakh people participate

சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில் 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் 61 ஆயிரத்து 235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் முகாமில் 30 லட்சத்து 83 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 609 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவர்களை பரிசோதித்ததில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் இதுவரை 27 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் மாலை நேர காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 9 ஆயிரத்து 508 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 72வது குடியரசு தின விழா; தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
2. சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
3. சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
5. சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.